
வெஜிடேரியன்களுக்கு மூளை அளவு சிறியதாக இருக்குமா?
வெஜிடேரியன் டயட் – நான்-வெஜிடேரியன் டயட் இரண்டைப் பற்றியும் எப்போதுமே நிறைய பாசிடிவ் மற்றும் நெகட்டிவான தகவல்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. அவை பெரும்பாலும் நல்லதா? கெட்டதா? எதில் கொழுப்பு, கார்ப்ஸ் அதிகம் என்பது பற்றி தான் இருக்கும்.
ஆனால் இப்போது ஒரு வதந்தி இருக்கிறது? அது மிகவும் வித்தியாசமானது. வெஜிடேரியன் டயட் பின்பற்றுகிறவர்களுக்கு மூளையின் அளவு சிறியதாக இருக்கும் என்பது.
இது உண்மை தானா? இதன் பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை என்ன என்பது பற்றி டாக்டர் ராதாகிருஷ்ணன் பால்ராஜ் அவர்கள் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதுல அவர் என்ன சொல்றார்னு பார்ப்போமா!
நான்-வெஜ் டயட் பின்பற்றுகிறவர்களுக்கு புரதம், வைட்டமின் டி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் வெஜிடேரியன்களை விட அதிகமாகக் கிடைக்கும் என்பது உண்மை தான்.
அதேபோல வெஜிடேரியன் உணவுகளை விட அசைவ உணவுகளில் கொழுப்புகள் அதிகம். அதனால் கார்ப்ஸ் உடன் சேர்ந்து கொழுப்பும் எடுக்கும்போது கொலஸ்டிரால் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்.
இப்படி ஊட்டச்சத்து ரீதியாக நிறைய கருத்துக்களும் உண்மைகளும் இருக்கின்றன. ஆனால் மூளையின் அளவுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று கேட்டால், அதன் பின்னால் இருக்கும் அறிவியலை கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம் வாங்க.
வெஜிடேரியன்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு

காய்கறிகள் மற்றும் முழு தானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருந்தாலும் நான்-வெஜிடேரியன்களை விட வெஜிடேரியன்களுக்கு சில முக்கியமான ஊட்டச்சத்துக்கள் குறைவாகத்தான் கிடைக்கும்.
குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி12, கொலாஜன், வைட்டமின் உள்ளிட்ட சில உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சைவ உணவுகளைவிட அசைவ உணவுகளில் கொஞ்சம் அதிகம்.
வெஜிடேரியன்களும் சத்து குறைபாடும்

நான் வெஜிடேரியன்களை விட வெஜிடேரியன்களுக்கு சைவ உணவுகளில் சில முக்கியமான ஊட்டச்சத்துக்கள் குறைவாகவே இருக்கும்.
குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மிகக் குறைவாக இருக்கும். அதனால் வெஜிடேரியன்கள் அதற்குத் தகுந்தபடி சப்ளிமெண்ட்டுகளை மருத்தவரிடம் ஆலோசனை கேட்டு எடுத்துக் கொள்வது நல்லது.
மூளை வளர்ச்சயில் பாதிப்பு ஏற்படுத்துமா?

முக்கியமான சில ஊட்டச்சத்துக்கள் குறைவாகக் கிடைக்கும்போது மூளையின் செயல்பாடு மற்றும் நினைவாற்றல் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றில் சிறிய அளவில் பாதிப்பு (குறைபாடு) ஏற்படும் வாய்ப்பு உண்டு.
ஆனால் அதற்காக இந்த மூளையின் திறன் குறைவதற்கு வெஜிடேரியன் சாப்பிடுவது தன் காரணம் என்றும் சொல்லிவிட முடியாது.
வெஜிடேரியனாக இருந்தாலும் சரி, நான்-வெஜிடேரியனாக இருந்தாலும் சரி என்ன வகையான ஊட்டச்சத்து உணவுகளைத் தேர்வு செய்து சாப்பிடுகிறீர்கள் என்பது தான் முக்கியம்.
உண்மையா? வதந்தியா?

மூளையின் அளவு சிறியதாக இருப்பதற்கும் உங்களுடைய வெஜிடேரியன் டயட்டுக்கும் எந்தவித அறிவியல் தொடர்புமே கிடையாது.
மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை சரியாக நீங்கள் கொடுத்தால் அதன் செயல்பாடும் மிகச்சிறப்பாகவே இருக்கும். அது நான் வெஜ் உணவுகளில் இருந்து மட்டும்தான் கிடைக்க வேண்டும் என்றோ, வெஜிடேரியன்களில் கிடைக்காது என்றோ அர்த்தம் கிடையாது.
நான் வெஜ் மட்டும் போதுமா?

நான் – வெஜ் டயட்டில் கொஞ்சம் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகக் கிடைக்கும் என்பதற்காக அதுதான் சிறந்த டயட் என்றும் அர்த்தமல்ல.
அசைவ உணவுகளில் சைவ உணவுகளைக் காட்டிலும் கொஞ்சம் கலோரிகள் அதிகம். இந்த கலோரிகள் அளவைத் தாண்டும்போது, அது சரியாக எரிக்கப்படாமல் இருக்கும்போது உடல் பருமன் உண்டாகும்.
அதேசமயம் வெஜிடேரியன் டயட்டில் புரதங்கள் உங்களுக்குக் குறைவாகக் கிடைக்கலாம். ஆனால் நார்ச்சத்துக்கள் அதிகமாகக் கிடைக்கும். அதனால் இனி குழம்பவே வேண்டாம்.
வெஜ்ஜா நான்-வெஜ்ஜா என்பதில் எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால் நம் உடலுக்குப் போதுமான எல்லாவித ஊட்டச்சத்தும் உங்கள் உணவில் இருந்து கிடைக்கும்படியான டயட்டை பின்பற்றினாலே போதும்.
இறுதியாக,
டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியது போல நம் உடலுக்குத் தேவையான ஊடடச்சத்துக்களைத் தான் நம் உடல் கணக்கிடுமே தவிர அதற்கு நாம் என்ன உணவைத் தேர்வு செய்கிறோம் என்பது அதற்குத் தெரியாது. அதற்குத் தேவையானது வெறும் ஊட்டச்சத்துக்கள் மட்டுமே.
பொறுப்பு துறப்பு – இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இது மருத்துவரின் இன்ஸ்டகிராம் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் உண்மைத்தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு பொறுப்பாகாது.