விரால் மீன் குழம்பு

விரால் மீன் குழம்பு செய்வது எப்படி..?

இன்றைக்கு நாம் சமையல் பதிவில் சூப்பரான விரால் மீன் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்க போகிறோம். சாதாரணமாக மீன் குழம்பு என்றாலே அதிகபட்சம் எல்லாருக்கும் பிடிக்கும்.

ஒவ்வொரு மீனிலும் அதிகளவு சத்துகள் உள்ளது. அதுவும் விரால் மீன் என்றால் தனி சுவை, தனி சத்துக்கள் உள்ளது. இப்போது விரால் மீன் குழம்பு எப்படி வைப்பது என்பதை பார்போம்.

விரால் மீன் குழம்பு

தேவைப்படும் பொருட்கள்:

  • விரால் மீன் – 1/4 கிலோ
  • சின்ன வெங்காயம் – 50 கிராம்
  • தக்காளி – 2
  • புளி – சிறிதளவு
  • தேங்காய் துருவல் – கால் கப் (அரைத்து வைக்கவும்)
  • மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
  • மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – சிறிதளவு
  • பூண்டு – 10 பல்
  • வறுத்துப் பொடித்த வெந்தயம் – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு
  • வெந்தயம் – அரை டீஸ்பூன்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – தேவையான அளவு.
விரால் மீன் குழம்பு

செய்முறை:

ஸ்டேப்: 1

  • மீனை நன்றாக கழுவி வைத்துகொள்ளவும். பிறகு புளியை ஊறவைத்து கொள்ளவும்.
  • பின் வெங்காயம், பூண்டு, தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைத்துகொள்ளவும்.

ஸ்டேப்: 2

  • ஊறவைத்த புளி நன்றாக ஊறியதும் அதனை கெட்டியாக கரைத்து எடுத்து வைத்துகொள்ளவும்.

ஸ்டேப்: 3

  • மண் சட்டியில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் வெந்தயம், சீரகம், போட்டு வார்க்கவும்.
  • பின் அதில் வெங்காயம் போடவும், வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

ஸ்டேப்: 4

  • வெங்காயம் வதங்கியதும் அதனுடன் தக்காளி சேர்த்து குலையும் அளவுக்கு வதக்கவும்.
  • பின் அதில் மிளகாய்த்தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் போடவும்.
  • பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கவும். பிறகு அதனுடன் கரைத்து வைத்த புளி கரைசலை ஊற்றவும்.
  • அதன் பின் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

ஸ்டேப்: 5

  • குழம்பு நன்றாக கொதித்த பிறகு விரால் துண்டுகளை போடவும். போட்ட பிறகு மிதமான சூட்டில் கொதிப்பு வரும் வரை வைக்கவும்.
  • கொதித்த பிறகு அரைத்து வைத்த தேங்காய் துருவலை ஊற்றி 1 நிமிடம் கொதித்த பிறகு இறக்கவும். இறக்கிய பிறகு கொத்தமல்லி தலையை தூவி வைக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *