முகத்துக்கு ப்ளீச்

முகத்துக்கு ப்ளீச் செய்து சரியா, தவறா?

முன்பெல்லாம் பியூட்டி பார்லர் சென்று ஃபேஷியல் செய்துகொண்டால், அடுத்தடுத்த நாள்களில் முகம் பளிச்சென காட்சியளிக்கும். ஆனால், இப்போதெல்லாம் ஃபேஷியல் செய்தால் அதன் பலன் தெரிவதே இல்லை.  ஃபேஷியல் செய்யும் முறை மாறிவிட்டதா அல்லது ஃபேஷியல் சிகிச்சையே பலன் தராது என அர்த்தமா… ஃபேஷியல் தேவைதானா இல்லையா?

முன்பெல்லாம் ஃபேஷியல் செய்துகொள்ள பார்லர் போனால், ஃபேஷியலுக்கு முன் ப்ளீச்சிங் செய்வார்கள்.  அப்படிச் செய்வதால், முகத்திலுள்ள ரோமங்கள் எல்லாம் பூனைமுடி மாதிரி மாறும். சருமம் பளிச்சென நிறம் கூடியது மாதிரி தெரியும். 

இப்போது ப்ளீச்சிங் பொருள்களில் பல தடை செய்யப்பட்டுள்ளன. ப்ளீச் செய்து சரியா, தவறா என்றால், அது நிச்சயம் தவறுதான். அதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் சருமத்துக்கு மிகவும் கெடுதலானவை. எனவே, ப்ளீச் செய்வதைத் தவிர்ப்பதுதான் சிறந்தது. பல இடங்களிலும் ப்ளீச் செய்வதில்லை என்பதால்தான் ஃபேஷியல் செய்த பிறகு அதன் வித்தியாசத்தை உங்களால் உணர முடிவதில்லை. 

முகத்துக்கு ப்ளீச்

அதே சமயம் ஃபேஷியல் செய்து சரியா என்றால், சரியானதுதான். அது ஒருவகையில் நம் சருமத்தின் இறந்த செல்களை அகற்றுவது போன்றதுதான்.  சருமத்தின் செல்கள் 14 நாள்களுக்கொரு முறை வளர்ந்துகொண்டே இருக்கும். அந்த செல்கள் உதிர்ந்து, மீண்டும் புதிய செல்கள் உருவாகும். வயதாக, ஆக இறந்த செல்கள் உதிராமல், சருமத்திலேயே தேங்கி நிற்கும். அதை நீக்கிவிட ஃபேஷியல் செய்வது அவசியமாகிறது.

ஃபேஷியல் செய்த அடுத்த நாளே உங்கள் முகத்தில் வித்தியாசத்தை எதிர்பார்க்கக்கூடாது.

ஃபேஷியல் செய்வதென முடிவு செய்துவிட்டால், அதை மருத்துவர்களிடம் செய்துகொள்வதுதான் பாதுகாப்பானது. பியூட்டி பார்லர்களில் செய்யும்போது யாருடைய சருமம் எந்த வகையிலானது, அந்தச் சருமத்துக்கு எந்தப் பொருள் பொருந்தும் என்றெல்லாம் பார்த்துச் செய்கிறார்களா என்பது சந்தேகமே.

என்ன பிராண்டு அழகு சாதனங்களை உபயோகிக்கிறார்கள் என்பதும் சந்தேகம்தான். அதையெல்லாம் கவனிக்கத் தெரிந்த நிபுணர்கள் அங்கே இருக்கிறார்களா என்பதும் கவனிக்கப்பட வேண்டும். எனவே, சரும மருத்துவர்களிடம் ஃபேஷியல் செய்துகொள்வதுதான் சிறந்தது. அதையும் எளிமையான ஃபேஷியலாக வைத்துக்கொள்வது இன்னும் சிறப்பு.

முகத்துக்கு ப்ளீச்

ஃபேஷியல் செய்த அடுத்த நாளே உங்கள் முகத்தில் வித்தியாசத்தை எதிர்பார்க்கக்கூடாது. அதுவும் கிட்டத்தட்ட ஜிம் சென்று உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது போன்றதுதான். ஜிம்மில் சேர்ந்த அடுத்த நாளே, உடல் சரியான வடிவத்துக்கு வர வேண்டும் என எதிர்பார்ப்பது எப்படித் தவறானதோ, அதைப் போலத்தான் ஃபேஷியலும். 

மாதம் ஒருமுறையாவது ஃபேஷியல் செய்துகொள்ள வேண்டும். முறையாகச் செய்யப்படும் பட்சத்தில் உங்கள் சருமம் பொலிவிழக்காமல், பளிச்சென இருக்கும்.

More From Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *