அனைவருமே தங்களை அழகுப்படுத்தி கொள்ளத்தான் விரும்புவார்கள். இதற்காக பல பொருட்களை பயன்படுத்தி சருமத்தை அழகுபடுத்தி கொள்வார்கள். ஆனால் பலபேருக்கு முகம் இருக்கும் நிறத்தைவிட பாதங்கள் கருமையாக இருக்கும்.
எனவே கால்களின் நிறத்தை அதிகரிக்க பார்லருக்கு செல்வார்கள். ஆனால் பார்லருக்கு செல்லாமலே வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி பாதங்களில் உள்ள கருமையை போக்கலாம்.
அதனை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். கால்கள் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளது. எனவே நாம் தான் கால்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.
How To Get Rid of Dark Feet Naturally in Tamil

தேன் மற்றும் பப்பாளி:

ஒரு கிண்ணத்தில் 4 ஸ்பூன் அளவிற்கு பழுத்த பப்பாளியின் சதையினை எடுத்து கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக மசித்து கலந்து கொள்ளுங்கள்.
இதனை பாதம் முழுவதும் தடவி 15 நிமிடங்களுக்கு உலர விடுங்கள். பிறகு தண்ணீரை பயன்படுத்தி கழுவி விடுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் பாதம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
உருளைக்கிழங்கு:

ஒரு சிறிய உருளைக்கிழங்கினை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளுங்கள். பிறகு, உருளைக்கிழங்கினை துருவி அதன் சாற்றை மட்டும் பிழிந்து எடுத்து கொள்ளுங்கள். இப்போது, இதனை பாதங்களில் அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு உலர விட்டு அதன் பிறகு கழுவி விடுங்கள்.
உருளைக்கிழங்கு சாறு இயற்கையாகவே அழுக்குகளை நீக்கும் தன்மை கொண்டது. எனவே இதனை பாதங்களில் அப்ளை செய்வதன் மூலம் பாதத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி பாதம் பளபளப்பாகும்.

தக்காளி மற்றும் தயிர்:

முதலில் ஒரு மிக்ஸி ஜாரினை எடுத்து கொள்ளுங்கள். அதில் நறுக்கிய தக்காளி மற்றும் 2 அல்லது 3 ஸ்பூன் அளவிற்கு தயிரினை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பிறகு, இப்பேஸ்டினை பாதங்களில் நன்றாக அப்ளை செய்து 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். மசாஜ் செய்த பிறகு 15 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு தண்ணீர் கொண்டு பாதங்களை நன்றாக கழுவி விடுங்கள்.
தக்காளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பொலிவாக்கும் தன்மை உடையது. மேலும் தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் மென்மையாக்கும் தன்மை உடையது. எனவே இவை இரண்டையும் கலந்து பாதத்திற்கு அப்ளை செய்வதன் மூலம் பாதமானது பொலிவாகவும் மென்மையாகவும் இருக்கும்.
கை முட்டி, கால் முட்டியில் உள்ள கருமையை நீக்குவதற்கு இதை ட்ரை பண்ணி பாருங்க..
மேற்கூறியுள்ள குறிப்புகளில் உங்களுக்கு விருப்பமானவற்றை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம் பாதங்களின் கருமையை எளிதில் போக்கலாம்.