நரம்பு தளர்ச்சி – ஊட்டச்சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது அல்லது அதிகமாக சாப்பிடுவது இவை இரண்டும் நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்டச்சத்து உணவுகளில் உடலுக்கு சரியான அளவு கிடைக்கவில்லை என்றால் பெர்னீஷியஸ் அனிமியா எனும் ரத்தைத்தையும், நரம்பையும் நிச்சயம் பாதிக்கும் நோய் ஏற்படும்.
அதேபோல் இந்த நரம்பு தளர்ச்சி நோய் வைட்டமின் பி12 குறைப்பட்டால் ஏற்படக்கூடிய நோய். எனவே நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதங்கள், கை, கால்களில் எரிச்சலை ஏற்படுத்தும்.
பின்பு பல்வேறு விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். சரி இந்த நரம்பு தளர்ச்சி பிரச்சனையை சரி செய்ய கீழ் கொடுக்கப்பட்டுள்ள உணவு முறைகளை தினமும் கடைபிடித்தாலே போதும் இந்த நரம்பு தளர்ச்சி பிரச்சனையை சரி செய்துவிட முடியும். சரி வாங்க அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
நரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள்..!
கோழியின் ஈரல் உள்ளிட்ட அசைவ உணவுகளில் தான் வைட்டமின் பி 12 அதிகம் இருக்கிறது. பால், முட்டையில் குறைவாக இருக்கிறது. பிற காய்கறிகளில் பி 12 இல்லை. இதனால்தான், தீவிர மரக்கறியாளருக்கு (வெஜிட்டேரியன்) பெர்னீஷியஸ் அனீமியா நோய் வர வாய்ப்பு அதிகம்.
அதற்கான அறிகுறிகள், கை, கால் எரிச்சல். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, இவர்கள் பால் பொருட்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
நரம்பு பாதுகாப்புக்கு, எல்லா உணவிலும் மஞ்சள் தூள், வெந்தயத்தை மறக்காமல் சிறிதளவாவது சேர்க்க வேண்டும்.
வயோதிகத்தில் நரம்பு வலுப்பெற அமுக்கிராங்கிழங்குப் பொடியை 1/2 தேக்கரண்டி அளவு பாலில் கலந்து இரவில் 45 நாட்கள் சாப்பிடவும்.
ஓரிதழ் தாமரைப் பொடி, பூனைக்காலிப் பொடி நரம்பை வலுப்படுத்தும் மூலிகை உணவுகள். மருத்துவர் ஆலோசனையுடன் சாப்பிடுவது பார்கின்சன் நோய் உள்ளிட்ட பல நரம்பு நோய்களை ஆரம்ப நிலையிலேயே களைந்து விடும்.

நரம்பு தளர்ச்சி குணமாக பழங்கள்:
நரம்பு மண்டலம் வலுப்பெற்றிருக்க பழங்கள் அதிகளவு சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம். தNarambu Thalarchiற்போது உலகமெங்கும் அதிகமாகிவரும் முதுமையில் வரக்கூடிய ‘அல்சீமர் நோய்’ எனும் மறதி, வலுக்குறைவு, தடுமாற்றம் நமக்கு வராமல் இருக்க வேண்டுமா? 40 வயதில் இருந்து தினமும் ஒரு முறை ஏதேனும் பழங்களை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நரம்பு தளர்ச்சி குணமாக கீரை வகைகள்:
உடல் ஆரோக்கியத்தை காக்க தினமும் அதிகளவு பொன்னாங்கன்னிக்கீரை, மணத்தக்காளிக்கீரையை பகல் உணவில் சேர்த்துக்கொள்வது நரம்புகளுக்கு மிகவும் நல்லது.
நரம்பு தளர்ச்சி குணமாக ஜாதிக்காய் தூள்:
இரவில் ஒரு சிட்டிகை சாதிக்காய் தூள் சாப்பிடுவது நரம்பு வலுப்பெற உதவும்.
நரம்பு தளர்ச்சி குணமாக லவங்கப்பட்டை:
தேநீரில் லவங்கப்பட்டை போட்டுக் குடிப்பது, நரம்புகளுக்கு நலம் தரும்.
நரம்பு வலுப்பெற மீன்:
அசைவம் சாப்பிடுபவர்கள் உணவில் அதிகம் மீன் சேர்த்து வரலாம். உடல் ஆற்றலாக செயல்பட கொழுப்பு அமிலங்கள் தேவை. அவை மீன் உணவில் நிறைந்திருக்கிறது. கொழுப்பு அமிலம் குறைவால் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உணவில் மீனை அதிகம் சேர்த்துவரலாம்.
நரம்பு தளர்ச்சி குணமடைய அவகோடோ:
அவகோடோ நரம்பு மண் டலத்தை வலுப்படுத்துகிறது. வேறு பழங்களுடன் ஒப்பிடும் போது அவகேடோவில் அதிக ஊட்டசத்துகள் நிறைந்திருக்கிறது. எனவே நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் அவகோடோ பழத்தினை அடிக்கடி சாப்பிடுங்கள்.
இந்த நரம்பு தளர்ச்சிக்கு நாட்டு மருந்து ஒரு சிறந்த மருவமாகும் எனவே மேல் கூறப்பட்டுள்ள வைத்தியங்களில் ஏதேனும் ஒன்றினை தொடர்ந்து பின் பற்றி வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி குணமாக சித்த மருத்துவம்:
அஸ்வகந்தா சூரணம் மன அழுத்தம் குறைத்து நரம்பு வலிமை தரும்.
அமுக்குரா சூரணம் நரம்புகளை வலுப்படுத்தும் தளர்ச்சி குறைக்கும்
சிவந்தை மிளகு கூட்டு நரம்புகள் மற்றும் மூளைக்கு சக்தி கொடுக்கும்
வாழ்க்கை முறை:
- உங்களுடைய உணவில் பசும்பால், பசுபயறு, பேரீட்சைப்பழம், வெல்லம் சேர்த்து கொள்ள வேண்டும்.
- தண்ணீரில் ஊற வைத்த பாதாம், வேப்பம்பருப்பு 5 முதல் 7 தினமும் சாப்பிட வேண்டும்.
- மன அழுத்தம் குறைய யோகா,தியானம், பிராணாயாமம் செய்ய வேண்டும்.
- ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.
- காபி மற்றும் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
- அதிகமாக உப்பு மற்றும் காரமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- இரவு ரொம்ப நேரம் தூங்காமல் இருக்க கூடாது.