தோல் அரிப்பு

தோல் அரிப்பு: அதன் அறிகுறிகள் மற்றும் தீர்வு

8 வகையான தோல் அரிப்பு: அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்? தீர்வு என்ன வாங்க தெரிஞ்சுக்கலாம்!

சரும நோய்கள் என்பது ஒன்றை மட்டும் குறிப்பதல்ல. தோலில் கொப்புளங்கள், தோல் சொறி, தோல் தடித்தல், தோலில் இருக்கும் செதில்கள் உதிர்தல், படை நோய் என பல பாதிப்புகள் தோலை பாதிக்கலாம்.

தோலில் உண்டாகும் அறிகுறிகள் பொறுத்து சிகிச்சை அளிப்பதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தலாம். சில வகையான தோல் நோய்க்கு சிகிச்சை தேவைப்படாது. அவை தானாகவே சரியாகும்.

ஆனால் சில வகையான தோல் நோய்களுக்கு கண்டிப்பாக சிகிச்சை தேவைப்படும். சில அவ்வபோது வரக்கூடியவை. அதனால் தோல் அரிப்பு என்ன காரணத்தினால் வந்துள்ளது என்பதை அறிந்து சிகிச்சை பெறுவது நல்லது. இந்த தோல் அரிப்பு காரணங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.

முக்கிய அம்சங்கள்:

  • அரிக்கும் தோலழற்சி அடோபிக் டெர்மடிடிஸ், வீக்கம் , எரிச்சல், அரிப்பு சொறி உண்டு செய்கிறது
  • காதணிகளில் நிக்கல் ஒவ்வாமை,தொடர்பு தோல் அழற்சிக்கு பொதுவான காரணமாகும்.
தோல் அரிப்பு

உங்கள் சருமத்தில் வரக்கூடிய் சொறி, அரிப்பு, கொப்புளம் போன்றவை அனைத்தும் ஒரு காரணங்களால் மட்டும் வருவதில்லை . இது மிதமானது முதல் இலேசானது வரை இருக்கலாம். காரணங்கள் பொறுத்து சிகிச்சை அளிப்பதன் மூலம் அவை மீண்டும் வராமல் தடுக்கலாம். அது குறித்து முழுமையாக தெரிந்துகொள்வோம்.

சரும அரிப்பு சொறி போன்றவற்றுக்கு என்ன காரணம்

சரும அரிப்புக்கு ஒன்றை மட்டும் காரணமாக சொல்ல முடியாது. உணவுகள், மருந்துகள், காதணிகள் போன்ற பொருள்களுக்கு ஒவ்வாமை இருப்பது, சுற்றுச்சூழல்களால் சருமம் ஒவ்வாமை பெறுவது, சின்னம்மை போன்ற நோய்கள், தடிப்புத்தோல் அழற்சி போன்ற நாள்பட்ட நிலைமைகள், படை என்னும் ரிங்வோர்ம் போன்ற தொற்றுகள் , சிரங்குகள், சில நேரங்களில் தோல் அரிப்புடன் சிக்கலான உபாதை உண்டாகும்.

சில நேரங்களில் சிகிச்சை இல்லாமல் சரியாகும் என்றாலும் சில நேரங்களில் சிகிச்சை தேவைப்படும். ஏனெனில் சில நேரங்களில் இது உடல்நல குறைபாட்டின் ஆரம்ப அறிகுறியாகவோ அல்லது எச்சரிக்கை அறிகுறியாகவோ இருக்கலாம். சரும அரிப்புகள், தடிப்புகள் தீவிரமாக எடுத்துகொள்ள வேண்டும். சரும அரிப்பு மற்றும் தடிப்புகளின் வகைகள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

சரும அரிப்பு நோய்களின் வகைகள்
தோல் அரிப்பு

சரும அரிப்பில் எக்ஸிமா என்னும் தோல் அழற்சி

எக்ஸிமா பெரும்பாலும் குழந்தைகளிடம் அதிகம் பார்க்கலாம். பெரியவர்களில் 50 பேரில் ஒருவரை மட்டும் பாதிக்கிறது. அரிக்கும் தோலழற்சி அடோபிக் டெர்மடிடிஸ், வீக்கம் , எரிச்சல் மற்றும் அரிப்பு சொறி போன்றவற்றை உண்டு செய்கிறது.

அரிக்கும் தோலழற்சி காய்ச்சல், ஆஸ்துமா, உணவு ஒவ்வாமை, மன அழுத்தம் அமெரிக்கன் அகாடமி ஆஃப் அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் இம்யூனாலஜி அறிக்கையின் படி கடுமையான அரிக்கும் தோலழற்சி உள்ளவர்களில் 50 % பேருக்கு பொதுவான மரபணு கோளாறு உள்ளது. இதற்கு ஸ்டீராய்டு க்ரீம்கள், மாய்சுரைசர்கள் உதவும். சருமத்தில் தொற்று இருக்கும் போது ஆன்டி பயாடிக்ஸ் பரிந்துரைப்பார்கள்.

சரும அரிப்பில் சொரியாசிஸ்

தடிப்புத் தோல் அழற்சியை ஆட்டோ இம்யூன் அழற்சி கோளாறு என்று சொல்வதுண்டு. இது தோல் செல்களின் இயல்பான சுழற்சியை சீர்குலைக்கிறது. உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு வெள்ளை இரத்த அணுக்கள் தோலில் அழிவை ஏற்படுத்துகிறது. இது சருமத்தில் சிவப்பு, உயர்ந்த செதில் பிளேக்குகள் உருவாகின்றன.
இது மரபணு நோய். தொற்றாது.

இளஞ்சிவப்பு நிறத்தில் முழங்கைகள், முழங்கால்களில் உருவாகின்றன. இது வெள்ளை நிறத்தில் இருக்கும் இறந்த செல்களின் அடுக்கு ஆகும். இந்த தடிப்புத்தோல் அழற்சியின் மற்றொரு வகை சொரியாசிஸ் சிறிய சிவப்பு பருக்கள் மற்றும் பிளேக்குகள் உருவாக்குகின்றன.

இவதில் எரித்ரோடெர்மிக் சொரியாசிஸ் சீழ் நிறைந்த கொப்புளங்களை உண்டு செய்யும். பஸ்டுலர் சொரியாசிஸ் போன்ற தடிப்புத் தோல் அழற்சி கடுமையானவை என்பதோடு இவை குறைவாகவே உள்ளன. இது விரல் நகங்கள் கால் விரல் நகங்களில் குழி மற்றும் சேதத்தை ஏற்படுத்தும். அரிப்பு சொரியாசிஸ் என்பது ஆர்த்ரைட்டிஸ் உள்ளிட்ட பிற சிக்கல்களை உண்டு செய்யலாம்.

சரும அரிப்பில் வெப்ப சொறி என்றால் என்ன?

வெப்ப சொறி மிலியாரியா என்று அழைக்கப்படுகிறது. தோலில் உள்ள வியர்வை சுரப்பிகள் தடுக்கப்படும் போது வெப்ப சொறி உண்டாகிறது. வியர்வையினால் வரக்கூடிய தோல் பாதிப்பில் இதுவும் ஒன்று. இது தோலில் வீக்கம் மற்றும் அரிப்பு, சிவப்பு புடைப்புகள் போன்றவற்றை உண்டு செய்யும். இது தானாகவே சரியாகிவிடும். குறிப்பாக உடல் உஷ்ணம் குறைந்து குளிர்ச்சியை உணரும் போது.

தோலில் வெப்ப சொறி என்றால் என்ன
தோல் அரிப்பு

தோலில் அலர்ஜி என்பது ஏன் உண்டாகிறது எப்படி இருக்கும்?

தோலில் ரப்பர் கையுறைகள் முதல் நச்சுப் படர்க்கொடி வரை தினமும் நாம் பயன்படுத்தும் ஏதேனும் ஒரு பொருள்களின் ஒவ்வாமை மற்றும் தாவரங்களின் வரம்பில் பல்வேறு ஒவ்வாமைகள் உள்ளன. இது உணர்திறன் உள்ளவர்களுக்கு அரிப்பு சொறி உண்டாகலாம்.

இது ஒவ்வாமை தொடர்பு தோல் அழற்சி ஆகும். நேஷனல் இன்ஸ்டிட்டியூர் ஆஃப் ஹெல்த் கூற்றுப்படி காதணிகளில் நிக்கல் ஒவ்வாமை,தொடர்பு தோல் அழற்சிக்கு பொதுவான காரணமாகும். இது ஒவ்வாமை ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குள் அறிகுறிகள் உருவாகலாம். ஆனால் இவை மறைய வாரங்கள் ஆகும்.

மேற்பூச்சு ஸ்டெரய்டுகள் தேவைப்படலாம். ஒவ்வாமை உண்டு செய்யும் தூண்டுதல்களை தவிர்ப்பது சிறந்த தடுப்பு முறையாக இருக்கும்.

சருமத்தில் உண்டாகும் படை நோய் அரிப்பை உண்டு செய்யுமா?

படை நோய் என்பது மோசமான தோல் நோய். அரம்ப நிலையில் இதை கவனிக்க வேண்டும். யூர்டிகேரியா, உடலின் ஹிஸ்டமைன் வெளியீட்டால் தூண்டப்படும் ஒரு வகை சொறி. இது மட்டி, வேர்க்கடலை மற்றும் மரக்கொட்டைகள் உள்ளிட்ட சில உணவுகளை உண்ணுதல், மருந்துகள் மற்றும் பென்சிலின் போன்ற ஒருவருக்கு ஒவ்வாமை உள்ள மருந்துகள் எடுத்துக்கொள்வது,

பூச்சி கடிப்பது, தீவிர உடல் செயல்பாடு படை நோய் உண்டு செய்யலாம். இது பெரும்பாலும் சில நாட்களில் சரியாகிவிடும். எனினும் சிலருக்கு மாதக்கணக்கில் படைநோய் இருக்கலாம். கடுமையான நிலையில் அரிப்பு மற்றும் அசெளகரியத்தை கட்டுப்படுத்தலாம்.

சொரியாசிஸ் என்னும் தோல் நோய்
தோல் அரிப்பு

தோல் நோய்கள் அரிப்பை உண்டு செய்யுமா?

சின்னம்மை – இதன் முதன்மை அறிகுறி அரிப்பு. திரவம் நிறைந்த கொப்புளங்களாக உருவாகும் சொறி. இறுதியில் வறண்டு போகும். இது தொற்று நோய் .

தட்டம்மை – மிகவும் தொற்றக்கூடிய வைரஸ் அம்மை நோய் உண்டு செய்கிறது. இது பழுப்பு நிற மங்கலான சொறியை உண்டு செய்யும். சொறி ஏற்படும் முன் காய்ச்சல், வாயில் புள்ளிகள், மூக்கில் நீர்வடிதல் உண்டு செய்யும்.

கை, கால் மற்றும் வாய்களில் உண்டாகும் நோய் பெயருக்கேற்ப அரிப்பு அல்லது வலியுடன் கூடிய சொறியை உண்டு செய்யும். இது குழந்தைகளிடம் அதிகம் பார்க்கலாம்.

பூச்சி கடி சருமத்தில் அரிப்பை உண்டு செய்யுமா?

சிறு அளவு மூட்டை பூச்சிகள், அரிப்புகளை ஏற்படுத்தும். படுக்கை பூச்சிகளுக்கு அதிக உணர்திறன் அல்லது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு அரிப்பை குறைக்க ஆன்டி ஹிஸ்டமைன்கள் தேவைப்படலாம்.
கண்ணுக்கு தெரியாத பூச்சி என்றாலும் இது அரிப்பு சொறியையும் உண்டு செய்யும். இது தொற்றும் தன்மை கொண்டது. இது சிரங்கு நோயை உண்டாக்கலாம். இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும்.

சருமத்தில் உண்டாகும் தொற்றுகள் சரும அரிப்பை உண்டு செய்யுமா?

உடலின் வெவ்வேறு பகுதிகளில் அரிப்பு சொறி உண்டாகலாம். ரிங்வோர்ம் என்பது பூஞ்சை தொற்று. இது தடிமனான விளிம்புடன் வட்ட, சிவப்பு அல்லது பழுப்பு அரிப்பு சொறி ஏற்படுகிறது. இது விளையாட்டு வீரர்களின் காலில் உருவாகும் ரிங்வார்ம் ஆகும். இது உடலின் ஒரு பாகத்திலிருந்து மற்றொன்றுக்கு பரவும்.

சருமத்தில் உண்டாகும் அரிப்புகளுக்கு இத்தனை காரணங்கள் உண்டு.எதனால் வருகிறது என்பதை கண்டறிந்தால் குணப்படுத்துவதும் எளிதாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு:

இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. உங்களுக்கு பாதுகாப்பான ஒன்றை தேர்வு செய்ய துறை சார்ந்த நிபுணரிடம் ஆலோசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *