தலைமுடி அடர்த்தி

தலைமுடி அடர்த்தியாக வளர வைக்க Tips

தலைமுடி உதிர்வை நிறுத்தி முடியை அடர்த்தியாக வளர வைக்க இதை மட்டும் பயன்படுத்துங்கள்..!

பெண்களுக்கு அழகை தருவது தலைமுடி. பெண்களுக்கு இடுப்பிற்கு கீழ் தலைமுடி இருந்தால் தான் அழகு என்று நம் வீட்டு பெரியவர்கள் சொல்ல கேட்டு இருப்போம். ஒரு சில பெண்களுக்கு முடி அதிகமாக வளர்க்க பிடிக்கும்.

ஒரு சில பெண்களுக்கு தலைமுடியை நீளமாக வளர்க்க பிடிக்காது. இருந்தாலும், பெரும்பாலான பெண்களுக்கு தலைமுடியை இடுப்பிற்கு கீழ் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால், இந்த ஆசை ஒரு சில பெண்களுக்கு மட்டுமே நிறைவேறும். பெரும்பாலான பெண்களுக்கு முடி உதிர்ந்து கொண்டே தான் இருக்குமே தவிர முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளராது.

அப்படி இருக்கும் பெண்களுக்கு பயனுள்ள வகையில், இப்பதிவில் முடி உதிர்வதை நிறுத்தி தலைமுடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர வைப்பது எப்படி.?  என்பதை கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

How To Get Rid of Hair Fall Home Remedies in Tamil:

தேவையான பொருட்கள்:

  • செம்பருத்தி பூ
  • செம்பருத்தி இலை
  • குப்பை மேனி
  • மருகு
  • மயில் மாணிக்கம்
  • கருவேப்பிலை
  • வேப்பிலை
  • மருதாணி
  • கற்றாலை
  • கீழா நெல்லி

செய்முறை:

  • முதலில், தேவையான பொருட்கள் அனைத்தையும் தேவையான அளவு எடுத்து கொள்ளுங்கள்.
  • இந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜார் அல்லது அம்மி கல்லில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
  • அடுத்து, இதனை சிறிது சிறிதாக அடை போன்று தட்டி நன்கு உலரும் வரை நிழலில் வைத்து காய வைக்க வேண்டும்.
  • அதன் பிறகு, இவை நன்கு உலர்ந்ததும் எடுத்து ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
தலைமுடி அடர்த்தி

பயன்படுத்தும் முறை:

காயவைத்து சேமித்து வைத்துள்ள அடையை கொஞ்சமாக எடுத்து, தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி வடிகட்டி நன்கு ஆறவைத்து தலைக்கு பயன்படுத்தி வந்தீர்கள் என்றால் முடி உதிர்வை நிறுத்தி முடி அடர்த்தியாக வளர தொடங்கும்.

இந்த எண்ணெயை, நீங்கள் வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தலாம். அதாவது, தலைகுளிக்கும் முன்பாக, தயார் செய்து வைத்துள்ள எண்ணெய்யை எடுத்து, தலையின் அடிப்பகுதி முதல் நுனிப்பகுதி வரை நன்றாக அப்ளை செய்து 1 மணிநேரம் அல்லது 2 மணிநேரம் ஊறவைத்து அதன் பிறகு, தலை குளிக்கலாம்.

இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு மூன்று பயன்படுத்தி வந்தீர்கள் என்றால் முடி உதிர்வு நின்று, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதை நீங்கள் உணரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *