சுகர் டெஸ்ட் எடுக்கும்போது ரிசல்ட் துல்லியமா வர செய்யகூடாத 3 தவறுகள்
நீரிழிவு நோயாளிகளும் முன்நீரிழிவு (pre-diabetes) பிரச்சினை உள்ளவர்களும் ரத்த சர்க்கரை அளவைப் பரிசோதிக்க டெஸ்ட்க்குப் போகும்போது சில சமயங்களில் ரத்த சர்க்கரை அளவு மிக அதிகமாக காட்டும்.
இவ்வளவு உணவுக் கட்டுப்பாடு, நடைப்பயிற்சி எல்லாம் செஞ்சும் எப்படி இவ்வளவு அதிகமா காட்டுதுனு குழம்புவார்கள். அதற்கு நீங்கள் செய்யும் இந்த 3 தவறுகள் தான் காரணம். அந்த தவறை தவிர்த்தாலே சுகர் அளவு சரியாகக் காட்டும் என்கிறார் நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் அருண் கார்த்திக் அவர்கள். அந்த 3 தவறுகள் என்னனு பார்க்கலாமா!
நீரிழிவு நோயாளிகள் வழக்கமான பரிசோதனைகள் செய்ய வேண்டிய நாள் வரும்போது அதற்கு முந்தைய நாளே தயாராகிவிடுவார்கள். வழக்கத்தைவிடவும் அன்றைக்கு தங்களுடைய டயட்டில் மிகக் கறாராக இருப்பார்கள்.
டீயில் சர்க்கரை இல்லாமல் குடிப்பார்கள். முதல்நாள் மட்டும் அரிசி சாதம் சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். இதெல்லாம் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம்.
உங்களுடைய ரத்த சர்க்கரை அளவை சரியாக தெரிந்தால் மட்டும்தான் அதற்கான மருந்துகள் கூட்டுவதா, குறைப்பதா என்பதெல்லாம் சரியாக கணிக்க முடியும். அதனால் சுகர் டெஸ்ட் எடுக்கப் போகும்முன் கீழ்வரும் மூன்ற தவறுகளை செய்யாதீங்க.
முதல் தவறு : முதல் நாள் இரவு உணவு
அடுத்த நாள் காலையில் ரத்தப் பரிசோதனைக்கு போகிறீர்கள் என்றால் அன்றைக்கு இரவு உணவு கொஞ்சம் வேகமாக எட்டு மணிக்கு முன்பாக (7 மணியளவில்) சாப்பிட்டு விடுங்கள். டெஸ்ட் எடுப்பதற்கு எட்டு மணி நேரம் இடைவெளி இருந்தால் போதும்.
அதேபோல நாளைக்கு டெஸ்ட் எடுக்கப் போறீங்க என்பதற்காக உணவை மிகவும் ரொம்ப கட்டுப்படுத்தாதீங்க. வழக்கமாக நீங்கள் சாப்பிடும் இரவு உணவை (இட்லி, தோசை, சப்பாத்தி, அடை, உப்புமா என உங்களுடைய நார்மல் உணவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
அதேபோல முந்தைய நாள் எண்ணெயில் பொரித்த உணவுகள், பூரி, அரிசி சாதம், பரோட்டோ போன்ற ஹெவியான உணவுகள் சாப்பிடாதீர்கள். மாலையில் பஜ்ஜி, போண்டா, பிஸ்கட்லாம் சாப்பிடாதீங்க.
அப்படி ஒருவேளை சாப்பிட்டால் அதற்கு அடுத்த நாள் டெஸ்ட்க்கு போகாதீர்கள். ரத்த சர்க்கரை அளவு கட்டாயம் அதிகமாகத் தான் காட்டும்.
அதேபோல போட வேண்டிய மாத்திரையை கட்டாயம் போட வேண்டும். இல்லையென்றால் அதிகமாகத் தான் காட்டும்.

இரண்டாவது தவறு : வெறும் வயிற்றில் டெஸ்ட் எடுப்பது
வெறும் வயிற்றில் தான் முதல் பிளட் sample கொடுக்க வேண்டும் என்பது உண்மை தான். அதற்காக சிலர் தண்ணீர் கூட குடிக்காமல் போவார்கள்.
அப்படி போக வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் டாக்டர் அருண் கார்த்திக்.
உணவு சாப்பிடாமல் போக வேண்டுமே தவிர தண்ணீர் கூட குடிக்காமல் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
தண்ணீர் மட்டுமல்ல, க்ரீன் டீ, பிளாக் டீ, பிளாக் காபி (சர்க்கரை இல்லாமல்) ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
இன்னும் சொல்லப்போனால் டெஸ்ட்க்கு போவதற்கு அரை மணி நேரம் முன்பு 2 கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு போவது இன்னும் நல்லது. அது ரத்த நாளங்களை விரிவடையச் செய்து ரத்தம் இலகுவாக எடுக்க முடியும்.

மூன்றாவது தவறு : உணவுக்குப்பின் எடுக்கும் டெஸ்ட்
காலையில் முதல் sample blood கொடுத்து விட்டு இரண்டாவது பிளட் (உணவுக்குப்பின் கொடுப்பது) கொடுப்பதற்கு முன் சாப்பிடும் உணவும் உங்களுடைய ஹெல்தியான நார்மல் டயட் (இட்லி, தோசை, பொங்கல்னு) உங்களுடைய வழக்கமான டயட்டாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
அதேபோல சிலர் செய்யும் முக்கியமான தவறு. இரண்டாவது பிளட் கொடுப்பதற்கு முன் வழக்கமாக போட வேண்டிய மாத்திரையை போட மாட்டார்கள். மாத்திரை போடாமல் டெஸ்ட் எடுத்தால் எவ்வளவு சுகர் இருக்குனு செக் பண்ணலாம்னு நினைச்சிகிட்டு பண்ணுவாங்க. அந்த தவறை செய்யவே கூடாது. கட்டாயம் மாத்திரை போடணும்.
அதேபோல உணவுக்குப் பின் 1 மணி நேரம் தாண்டி எந்த நேரத்திலும் எடுக்கலாம் (2 மணி நேரம் வரை). ஒரு மணி நேரத்தில் கொடுத்தால் தவறாக வரும், ஒன்றரை மணி நேரம்தான் சரியானது என்பதெல்லாம் இல்லை.
டெஸ்ட்டுக்கு போவதற்கு முன் எப்படி தயாராக வேண்டும்?
முதல் நாள் இரவு உணவை 7 மணியளவில் சாப்பிட்டு விட்டு சீக்கிரம் படுத்துத் தூங்க வேண்டும்.
முதல்நாள் வேண்டுமென்றே உணவை மிக குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்கள் வழக்கமாக உணவை சாப்பிடுங்கள். அதேசமயம் அதிகமாக ஹெவியாவும் சாப்பிடாதீங்க.
முதல்நாள் இரவு, அடுத்த நாள் காலை மாத்திரை போடுவதை தவிர்க்க கூடாது.
காலையில் நன்கு தண்ணீர் குடித்துவிட்டு டெஸ்ட்டுக்கு போகாதீர்கள்.
காலையில் முதல் டெஸ்ட் முடிந்தவரையில் கொஞ்சம் வேகமாக 8 மணிக்குள் எடுப்பது நல்லது. அப்போதுதான் இரண்டதாவது டெஸ்ட் 10-11 மணிக்குள் முடிக்க முடியும். அப்போதுதான் ரிசல்ட் சரியாக இருக்கும்.

இறுதியாக,
மேற்கண்ட முக்கியமான மூன்று தவறுகளையும் செய்யாதீர்கள். டாக்டர் அருண் கார்த்திக் அவர்கள் சொன்ன அறிவுரைகளைப் பின்பற்றி அந்த ஆலோசனையின் படி ரத்த சர்க்கரை அளவைப் பரிசோதிக்க டெஸ்ட்க்குப் போனால் உங்களுடைய டெஸ்ட் ரிசல்ட் துல்லியமாக இருக்கும்.
இதில் தவறுகள் செய்தால் உண்மையான உங்களுடைய சர்க்கரை அளவைக் கண்டுபிடிக்க முடியாது. ரிசஸ்ட் தவறாக (அதிகமாகவோ அல்லது குறைவாகவோ) வரும்.
இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இது விழிப்புணர்வு பதிவு. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு பொறுப்பாகாது.