கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கிறதா

கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கிறதா ?

மற்ற நேரங்களை விட கோடைகாலத்தில் உடலில் அதிகமாக வியர்க்க ஆரம்பிக்கும். இதனால் உடலில் வியர்வை துர்நாற்றம் வீசும். அதுபோல தோல் பிரச்சனைகளும் மற்ற ஆரோக்கிய பிரச்சனைகளும் வரக்கூடும். எனவே இந்த வெயில் காலத்தில் வியர்ப்பது இயற்கையான ஒன்றாக இருந்தாலும் அதனை தடுக்க சில இயற்கை முறைகளை பின்பற்ற வேண்டும்.

பொதுவாக ஒரு மனிதருக்கு 2 அல்லது 3 லிட்டர் என்ற அளவில் தான் வியர்வை இருக்கும். ஆனால் கோடைகாலத்தில் இவற்றின் அளவு சற்று அதிகரிக்கும். எனவே இதனை தடுக்க நாம் சிலவற்றை கண்டிப்பாக செய்ய வேண்டும். அதனை பற்றித்தான் இப்பதிவில் பார்ப்போகிறோம்.

What To Eat To Get Rid of Body Odor in Tamil:

தண்ணீர் குடித்தல்:

 how to avoid sweat smell in summer in tamil

மற்ற காலங்களை விட கோடைக்காலங்களில் அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும். அதாவது இந்நேரத்தில் ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.

தண்ணீர் அதிகமாக குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும். எனவே இதனால் உடலில் வியர்வை குறைவாக ஏற்படுவதுடன் துர்நாற்றமும் வீசாமல் இருக்கும்.

வைட்டமின் சி உள்ள பழங்கள்:

 how to get rid of body odour in summer in tamil

கோடைக்காலத்தில் வைட்டமின் சி உள்ள ஒரு பழத்தை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே வைட்டமின் சி உள்ள பழங்களான ஆரஞ்சு, பப்பாளி, ஸ்ட்ராபெரி, எலுமிச்சை, முலாம்பழம் மற்றும் அன்னாசி போன்ற பழங்களை தினமும் சாப்பிடுங்கள்.

நார்ச்சத்து உணவுகள்:

நார்ச்சத்து உணவுகள்

கீரை வகைகள், கேப்சிகம் மற்றும் முட்டைகோஸ் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும். கோடைக்காலத்தில் நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வதன் மூலம் வியர்வை துர்நாற்றத்தை போக்கலாம்.

க்ரீன் டீ:

 what to eat to get rid of body odor in tamil

க்ரீன் டீ உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் தன்மை கொண்டது. வியர்வை துர்நாற்றம் வீசுவதற்கு உடலின் நச்சுத்தன்மையும் ஒரு காரணம். எனவே க்ரீன் டீ குடிப்பதன் மூலம் வியர்வை துர்நாற்றத்தை போக்கலாம்.

கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கிறதா

வெளிர்நிற ஆடைகளை அணிதல்:

கோடைக்காலத்தில் வெளிர்நிற ஆடைகளை அணிய வேண்டும். ஏனெனில், அடர் நிற ஆடைகளை விட வெளிர்நிற ஆடைகள் குறைவான வெப்பத்தை உறிஞ்சுகின்றன. எனவே வெளிர் நிற ஆடைகளை அணிவதன் மூலம் அதிக வியர்வை ஏற்படுவதை தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *