கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம் குறைய

கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம் குறைய!

கர்ப்ப கால உயர் ரத்த அழுத்தம் உடனடியாக குறைய சில டிப்ஸ்

High Blood Pressure During Pregnancy in Tamil:- உயர் இரத்த அழுத்தம் என்பது நாம் எண்ணுவது போல் வயது தொடர்புடைய பாதிப்பு இல்லை. பெண்கள் பொதுவாக கர்ப்பகாலத்தில் ஹைப்பர் டென்ஸனால் பாதிக்கப்படுவது இயல்பான விஷயம் தான்.

பெண்கள் தங்களது கர்ப்ப காலத்திற்கு முன் அல்லது கர்ப்ப காலத்தில் அல்லது கர்ப்ப காலத்திற்கு பின் ஹைப்பர் டென்ஸனால் பாதிக்கப்படுகின்றன. இந்த உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக பாதிப்பு, பிறக்கும் குழந்தையின் எடையில் குறைபாடு, பிரீகிளாம்சியா (Pre-eclampsia), வருங்காலத்தில் இதய நோய் பாதிப்பு போன்ற பல்வேறு சிக்கல்களை உருவாக்குகிறது.

எனவே கர்ப்பிணி பெண்கள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் மற்றும் தங்களுடைய ஆரோக்கியத்தையும் அவசியம் கவனத்தில் கொண்டு தங்கள் இரத்த அழுத்த நிலையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். சரி இப்பதிவில் கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால் அந்த பிரச்சனையை குறைக்க சில ஆரோக்கிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன அதனை படித்தறியலாம் வாங்க.

இரத்த அழுத்தம்:-

high blood pressure during pregnancy
கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம் குறைய

பொதுவாக இரத்த அழுத்தத்தில் சுருங்குவது மற்றும் விரிவடைவது என்பது 120/80 அளவில் தான் இருக்கும். அதுவே பெண்களின் கர்ப்ப காலத்தில் 100/70 அளவாக கூடும். கர்ப்பகாலத்தின் இறுதி மூன்றாவது காலமான பிரசவம் நெருங்கையில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.

அந்த சமயத்தில் 140/90 என்று அளவு அதிகரிக்கும் பொழுது அதனை உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த இரத்த அழுத்தம் அதிகரிக்கும் பொழுது கர்ப்பிணி பெண்கள் சில வகையான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதாவது இந்த உயர் இரத்தம் அழுத்தம் கர்ப்பிணி பெண்ணிற்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும்.

சரியான சிகிச்சை முறையை பின்பற்றாவிட்டால் சில சமயத்தில் தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

உப்பின் அளவை குறைக்க வேண்டும்:-

கர்ப்பிணி பெண்களின் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு அதிகமாகும் போது அவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் அதிகமாகும். எனவே தாங்கள் சாப்பிடும் உணவில் உப்பின் அளவை அவசியம் குறைத்து கொள்ளுங்கள்.

மேலும் கடைகளில் விற்கப்படும் பாக்கெட் உணவுகளில் அதிகளவு சோடியம் சேர்க்கப்படுகிறது எனவே அவ்வகை உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது.

கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம் குறைய

பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடலாம்:-

கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க பொட்டாசியம் பெரிதும் பயன்படுகிறது. இந்த பொட்டாசியம் சத்து பலவகையான பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகளவு நிறைந்துள்ளது.

குறிப்பாக வாழைப்பழம், காராமணி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சிவப்பு பீன்ஸ், உலர் திராட்சை, தக்காளி போன்றவற்றில் அதிகளவு நிறைந்துள்ளது.

இவற்றையெல்லாம் தங்களுடைய உணவில் அதிகளவு சேர்த்து கொள்ளலாம். மேலும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள தானியங்களையும் அதிகளவு உட்கொள்வதன் மூலம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *