2
Home / மருத்துவம் (page 5)

மருத்துவம்

உயிரைக் காக்கும் கார உணவுகள்!

காரம் சாப்பிட்டால் உயிரைக் குடிக்கும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. சீனாவில் சுமார் 5 லட்சம் பேரிடம் 7 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் மூலம், இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது காரம் செறிந்த உணவை உண்பவர்களின் நீண்ட ஆயுளுக்கு அந்த உணவு வகை உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், புற்றுநோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளிலிருந்து கார உணவுகள் காக்கிறது. மிளகாயில் இருக்கும் கேப்சைசின் என்ற மூலப்பொருள் ... Read More »

பிரசவத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

பிரசவ நேரத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்னென்ன? என்பதை கீழே பார்க்கலாம். பிரசவ வலி (Labour pain) எப்படி? எப்போது? ஒரு பெண்ணின் வாழ்வின் முக்கிய கட்டம், அவள் குழந்தை பெற்றுக் கொள்ளும் தருணம். பத்து மாதங்கள் தன் வயிற்றுக்குள்ளேயே பொத்தி வைத்து பாதுகாத்த குழந்தையை வெளியேற்றும் அந்த நிமிடங்களை அவளால் என்றுமே மறக்க முடியாது. பிரசவ நேரத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்னென்ன? மருத்துவமனையில் சேர்வதற்கு ... Read More »

மூலநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?

மூலநோய் வருவதற்கான காரணங்கள், அறிகுறிகள் என்னவென்று கீழே பார்க்கலாம். நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் ‘மூலநோய்’ (Piles) முக்கியமானது. இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்கத் தவறுவதால், பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், ஆசனவாயில் வலி, ரத்தப்போக்கு, ரத்தசோகை எனப் பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள். காரணங்கள் : மலச்சிக்கல் மூலநோய்க்கு முக்கியக் காரணம். மலச்சிக்கலின் போது மலத்தை ... Read More »

வசம்பின் மருத்துவ பயன்கள்

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம். அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற ... Read More »

பல் வலியை போக்கும் கண்டங்கத்திரி

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாகக் காய்ச்சி வடித்துக்கொள்ள வேண்டும். இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவர நாற்றம் நீங்கும். கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து பக்குவமாகக் காய்ச்சி வடித்து தலைவலி, கீல்வாதம் முதலிய வாத நோய்களுக்கு பூசி வர அவை நீங்கும். காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு இதன் இலையை இடித்து ... Read More »

மணலிக் கீரையின் மகத்துவம்

மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது. மலச்சிக்கல் குணமாக: மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். ஞாபக சக்தி பெருக: ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும். குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய: ... Read More »

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes