2
Home / அழகுக் குறிப்புகள் (page 6)

அழகுக் குறிப்புகள்

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை போக்க உதவும் கஸ்தூரி மஞ்சள்

பெண்களில் சிலருக்கு முகத்தில் முடி வளர்வது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். கடைகளில் நிறைய லோஷன்களும், க்ரீம்களும் கிடைக்கின்றன. அவைகளை வாங்கி உபயோகப்படுத்தினாலும் ஒரேயடியாகத் தீர்ந்து விடாது. கஸ்தூரி மஞ்சள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி அத்துடன் கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் அல்லது மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக்கொண்டு தினமும் குளிக்கும்போதும், முகம் கழுவும்போதும் போட்டுத் சிறுது நேரம் கழித்து ... Read More »

சருமத்தை இளமையாக்கும் பாதாம் ஃபேஸியல்

சருமத்தை இளமையாக்க பாதாம் ஃபேஸியலை வாரம் ஒருமுறை செய்து வந்தால் படிப்படிபாக பலனை காணலாம். நாம் வாரம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை சருமத்தை பராம்ரித்தால் என்றும் ஒரே மாதிரியான சருமத்தை பெறலாம். பாதாம் ஃபேஸியல் : பாதாம் – 5 பால் – 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன் கடலை மாவு – 2 ஸ்பூன். பாதமை ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ... Read More »

கூந்தல் வளர்க்கும் ரகசியங்கள்

தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதன் மூலம், மண்டைப்பகுதி வறண்டு போகாமல் காக்கப்படும். அந்தக் காலத்துப் பெண்கள், தினமும் தலைக்குத் தேங்காய் எண்ணெய் வைக்கத் தவறியதில்லை. அதன் மூலம் அவர்களது கூந்தலை வறண்டு போகாமல் காத்தார்கள். இன்று தலைக்கு எண்ணெய் வைப்பது என்பது ஏதோ செய்யக்கூடாத விஷயம் என்கிற மாதிரி ஆகிவிட்டது. இந்தத் தலைமுறைப் பெண்களுக்கு கூந்தலில் எண்ணெய் பசையே தெரியக்கூடாது. அதே நேரம் எந்த ஹேர் ஸ்டைல் செய்தாலும் கூந்தல் ... Read More »

கூந்தல் வளர, இளநரை மறைய கரிசலாங்கண்ணி

கூந்தலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் தன்மை கொண்டது கரிசலாங்கண்ணி. அதை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம். கரிசலாங்கண்ணியை பற்றி தெரியாதவர்களே இல்லை. ஏன் என்றால் இந்த மூலிகை மஞ்சள் காமாலை, ரத்த சோகை, குழந்தை கண்ணுக்கு மை தீட்டுவதற்கு, முடி வளர்ச்சிக்கு, கீரையாகவும் பருப்புடன் மசியலாக சாப்பிடலாம். நிறைய மருத்துவதன்மை வாய்ந்த இந்த மூலிகையை நாம் பயன்படுத்தி பயன் அடைய வேண்டும். இளநரை மாற : கரிசலாங்கண்ணி ... Read More »

பொடுகு என்றால் என்ன?

ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, நோய் எதிர்ப்புத் தன்மையின் மாறுபாடு, அதீத மனஉளைச்சல், தட்பவெப்பநிலை மாறுபாடு, முகப்பரு, எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள தோல், தலையைச் சுத்தமில்லாமல் வைத்துக் கொள்ளுதல், அதிக உடல் பருமன் போன்றவை இதற்குக் காரணமாகின்றன. “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம். எக்ஸீமா(Eczema), சொரியாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நோய்களாளும் பொடுகு வரலாம். எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது ... Read More »

இயற்கையான முறையில் முடி உதிர்வைத் தடுப்பது எப்படி?

முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து, ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபளக்கும் உங்கள் கூந்தல். முடி உதிர்வதை தடுக்க அதிகம் அயன், வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும். இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது. அது முற்றிலும் தவறு. தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் .அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு ... Read More »

கண்களை சுற்றி கருவளயமா? கவலையை விடுங்கள்

இளம் பெண்கள் பலருக்கு கண்ணைச் சுற்றி கருவளையம் ஏற்படுகிறது. இது அவர்களுடைய முகப் பொலிவை குறைக்கிறது. பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் இந்த பிரச்னை உள்ளது. கருவளையம் ஏற்படக் காரணம் கண்களைச் சுற்றியுள்ள தசைகளுக்கு அதிக வேலை கொடுப்பதால் தான். தவிர தூக்கமின்மை, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, உடல் நலக் குறைவு, புகைப் பிடிக்கும் பழக்கம், இன்சோம்னியா (Insomnia) போன்ற உறக்கமின்மைப் பிரச்னைகளாலும் கருவளையம் தோன்றும். கடைகளில் இதற்கான நிறைய ... Read More »

முகப்பரு உங்கள் அழகை கெடுக்கிறதா?

இன்றைய இளஞர்களின் தலையாய பிரச்சனைகளில் முதலிடம் வகிப்பது இந்த முகப்பரு. பல மாணவ மானவிகளின் மன உளைச்சலுக்கு காரனமாக இருப்பது இந்த முகப்பரு என்றால் அது மிகையாகாது. காரணம் என்ன? இந்த முகப் பருக்களுக்கு என்னதான் காரணமாக இருக்க முடியும் என்று பார்த்தால் அது ஹார்மோன்களின் மாற்றங்கள் மட்டும் என்று சொல்லிவிட முடியாது. வயிற்றில் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகள் மற்றும் முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளாதது, உணவு பழக்கம் சரியாக, ... Read More »

பக்க விளைவுகளின்றி 7 நாட்களில் உடல் எடை குறைய இலகுவான வழி !

உடல் எடையை குறைப்பதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. அதிலும் சரியான டயட் மற்றும் ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போன்றவை பெரிதும் உதவும். இருப்பினும், உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால், விரைவில் உடல் எடை குறைந்துவிடும் என்று தவறான வழியை தேர்ந்தெடுக்கக்கூடாது. ஏனெனில் சிலர் பழைய உடையை அணியும் அளவில் எடையை குறைக்க வேண்டும் என்று இந்த ... Read More »

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes