2
Home / விளையாட்டு செய்திகள் / இதய நோய்களுக்கான இயற்கை வைத்தியம்
4

இதய நோய்களுக்கான இயற்கை வைத்தியம்

oil-image

நாம் உறங்கினாலும், விழித்திருந்தாலும், சும்மா இருந்தாலும், சுறுசுறுப்பாக வேலை செய்தாலும் இடைவிடாது துடிப்பது இதயம் ஒன்றுதான். இதயம் நன்கு செயல்பட்டால்தான், உடலின் அனைத்து உறுப்புகளும் நல்ல நிலையில் இருக்கும். அதனால் இதயத்தை நல்ல ஆரோக்கியமாக பேணி காப்பது அவசியமாகிறது.

· கருந்துளசி இலை, செம்பருத்தி பூ ஆகியவற்றை எடுத்த நன்கு சுத்தம் செய்து பின்பு அதை

கஷாயம் செய்து 10 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.

· மாதுளம் பழத்தை எடுத்து தோலை நீக்கி நன்கு அரைத்து பிழிந்து வடிகட்டி அந்த சாற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுவடையும்.

· பூண்டை சுட்டு சாப்பிட்டு பின்பு தண்ணீர் குடித்தால் படபடப்பு குறையும்.

· திராட்சைப் பழங்களை வெந்நீரில் ஊறவைத்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு துளசி சாற்றை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இதயத்தில் ஏற்படும் படபடப்பு குறையும்.

· வெள்ளரிப் பிஞ்சுகள் கிடைக்கும் காலங்களில் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால் இதய நோய் குறையும்.

· அத்திப்பழங்களை சுத்தம் செய்து நன்கு வெயிலில் காயவைத்து கல்லுரலில் போட்டு இடித்து வஸ்த்திரகாயம் (துணியில் சலித்தல்) செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் குறையும்.

· திராட்சைப் பழங்களை வெந்நீரில் ஊறவைத்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு துளசி சாற்றை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இதயத்தில் ஏற்படும் படபடப்பு குறையும்.

· மேலும் நார்ச்சத்து நிரம்பிய பயறு வகைகள், முளைகட்டிய தானியங்கள், கீரைகள், பழங்கள், வாழைப் பூ, வாழைத் தண்டு, புடலங்காய், முருங்கை, பீன்ஸ், பலாப்பழக் கொட்டை, ஓட்ஸ் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடுவது நல்லது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes