2
Home / குழந்தை நலம் / குழந்தைகளின் பேச்சு மொழித் திறன் குறைபாடும் – சிகிச்சையும்
4

குழந்தைகளின் பேச்சு மொழித் திறன் குறைபாடும் – சிகிச்சையும்

language-skills-of-children-speech-therapy_secvpf

திக்குவாய் குறைபாடு, குடும்பத்தில் பரம்பரையாக அதிகம் காணப்படுவதால், இதற்கு மரபணு முக்கிய காரணியாக இருக்கலாம்.

சில குழந்தைகள், தாமதமாகவே மொழித்திறன் வளர்ச்சியை அடையக்கூடும். ஆனாலும், பேச்சு மற்றும் புரிந்து கொள்ளும் திறன், வயதொத்த குழந்தைகள் போலவே இயல்பாக இருக்கும். கேட்பது, பார்ப்பது, புரிந்து கொள்ளுதல், நினைவில் கொள்ளுதல் போன்ற போதிய திறன்கள் பெற்றிருந்தும், மொழித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளால், மொழியை சாதாரணமாக மற்றக் குழந்தைகள் போல கற்க இயலாது. இக்குறைபாடின் தீவிரத்தைப் பொறுத்து குழந்தைகளுக்கு ஒன்றோ அதற்கு மேற்பட்ட அறிகுறிகளோ காணப்படலாம்.

பொதுவான அறிகுறிகள் :

வார்த்தையில் மெய்எழுத்து சேர்ந்து வரும்போது, அதை உச்சரிப்பதில் சிரமம் (உதாரணம்… ஈர்ப்பு – ஈப்பு).குறிப்பிட்ட ஒலி உள்ள வார்த்தைகளை உச்சரிப்பதில் சிரமப்பட்டு அதை விட்டுவிடுவது (உதாரணம்: பழம் – பலம்; ரத்தம் – தத்தம்…)வார்த்தையில் ஒரு ஒலிக்கு பதில் வேறு ஒலியைப் பயன்படுத்துவது (குளி – சுளி;தண்ணி – அண்ணி…)காரணி மற்றும் சிகிச்சை

பெரும்பாலும் பேச்சொலி குறைபாட்டின் காரணங்கள் என்னவென்று கண்டறியப்படவில்லை. இக்குறைபாடுள்ள குழந்தைகளின் நெருங்கிய உறவினருக்கு பேசும் திறனில் பிரச்சனைகள் இருக்கக் கூடும். நிறைய பேர் கொண்ட குடும்பத்திலுள்ள குழந்தைகளுக்கு இக்குறைபாடு தாக்கும் வாய்ப்பு அதிகம்.

குழந்தைக்கு பேச்சொலி குறைபாடு உள்ளதா எனக் கண்டுப்பிடிப்பதற்கு முன்னர், முதலில் அக்குழந்தைக்கு அறிவுத்திறன் குறைபாடு, காது கேளாமை, பெருமூளைவாதம் (Cerebral Palsy), பிளவுபட்ட மேல்வாய் (Cleft Palate) போன்ற பிற பிரச்சனைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதுபோன்ற கோளாறு உள்ளவர்களுக்கும், பேசுவதில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

பேச்சொலி குறைபாடு லேசாக பாதிக்கப்பட்டிருந்தால், 6 வயது ஆகும் போது தானே சரியாகி விடும். தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தால், அக்குழந்தைகளுக்கு பேச்சு சிகிச்சை அவசியம். ஸ்பீச் தெரபிஸ்ட் (Speech Therapist)குழந்தைக்கு எப்படி நாக்கை வைத்து உதட்டை மடித்து ஒலியெழுப்ப வேண்டுமென, சிறப்புப் பயிற்சி அளிப்பார். குறைபாட்டின் தீவிரத்தைப் பொறுத்து குழந்தைகள் இயல்பாக பேசவும்/கிட்டத்தட்ட இயல்பாக பேசவும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புள்ளது.

காரணி மற்றும் சிகிச்சை :

திக்குவாய் குறைபாடு, குடும்பத்தில் பரம்பரையாக அதிகம் காணப்படுவதால், இதற்கு மரபணு முக்கிய காரணியாக இருக்கலாம். இக்குறைபாடு, ஒருசில மாதங்கள் நீடிக்கலாம். அல்லது பல வருடங்கள் தொடர்ந்து நீடிக்கலாம். ஒருசில குழந்தைகளுக்கு, திக்குவாய் பிரச்சனை வாழ்நாள் முழுவதும் நீடித்து, பெரும்பாலும் மோசமும் அடையலாம்.திக்குவாயை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், அதன் தீவிரத்தை குறைத்து, சரளமாக பேச உதவ முடியும். இதற்கு ஸ்பீச் தெரபிஸ்ட் (Speech Therapist) மற்றும் உளவியல் ஆலோசகர்களின் (Psychologist) பங்கு மிகவும் அவசியம். பிரச்சனையின் தன்மையைப் பொறுத்து, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிகிச்சை தேவைப்படலாம். சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் திக்குவாய் குறைபாடு வாழ்நாள் பிரச்சனையாக ஆவதைத் தடுக்க முடியும்.

சமூக பேச்சுத் திறன் குறைபாடு (Social Communication Disorder)குழந்தைகள், இடம், பொருள் அறிந்து, சமூக சூழ்நிலைக்கு ஏற்ப பேசவோ/புரிந்து கொள்ளவோ தெரியாமல் இருந்தால், சமூக பேச்சுத் திறன் குறைபாடு இருக்கலாம். இதனால், பாதிக்கப்பட்டவருக்கு கல்வி, வேலை, சமூகத்தில் பழகுதல், நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றில் பிரச்சனை ஏற்படக்கூடும்.

இக்குறைபாட்டின் அறிகுறிகள், குழந்தைப் பருவத்திலேயே தொடங்கினாலும், சமூகத்திறன்களை வெளிப்படுத்தும் சூழ்நிலை ஏற்படும்போதுதான் வெளித்தெரிய வரும். இதைக் கண்டறியும் முன்னர், நரம்பியல் கோளாறு, ஆட்டிசம், அறிவுத்திறன் குறைபாடு அல்லது வேறு மனநல கோளாறுகள் போன்ற கோளாறுகளால் இந்த அறிகுறிகள் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தன்னிடம் பேசுபவரின் தன்மை/பின்னணி, பேசும் இடம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்றவாறு பேசும் பாணியை மாற்றிக் கொள்ள இயலாமை. (உதாரணம்… விளையாட்டு மைதானம் மற்றும் வகுப்பில், வெவ்வேறு விதமாக பேசுவது மற்றும் குழந்தை/பெரியவரிடத்தில் வெவ்வேறு விதமாக பேசுவது).

உரையாடலின் போது பின்பற்றப்படும் வழிமுறைகளைக் (உதாரணம்… மற்றவர் பேசுவதற்கு அடுத்தடுத்து வாய்ப்பளிப்பது, சொல்வதை மற்றவர் தவறாக புரிந்து கொண்டால், அதைத் திரும்பவும் புரியும்படி சொல்வது மற்றும் உரையாடலை ஒழுங்குப்படுத்தக்கூடிய வாய்மொழி மற்றும் சைகை சமிக்ஞைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல்) கடைப்பிடிப்பதில் சிரமம். மற்றவர்கள், மறைமுகமாக/சூசகமாக சொல்வதை புரிந்து கொள்ள முடியாத தன்மை.

காரணி மற்றும் சிகிச்சைசமூக பேச்சுத் திறன் குறைபாட்டின் சரியான காரணம் கண்டறியப்படவில்லை. இவ்வகை குறைபாடுகள் உள்ளவர்களின் குடும்ப நபர்கள் பெரும்பாலும், கற்றல் குறைபாடு/ஆட்டிசம்/மொழித்திறன் குறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இக்குறைபாடு ஏற்படுவதற்கு மரபணு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.குழந்தையின் தேவைக்கேற்ப அவர்களுக்கான சிகிச்சையை மனநல நிபுணர் வடிவமைப்பார்.

பொதுவாக, இக்குழந்தைகளுக்கு சமூகத் திறன் (Social Skills) பயிற்சி தரப்படும். இவர்களின் அதீத உணர்ச்சிகளை சமாளிக்க அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (Cognitive Behavior Therapy) அளிக்கப்படும். மொழிப் பயிற்சி (Speech Therapy) மூலம் நடைமுறைக்கேற்றவாறு பேசக் கற்றுக் கொடுக்கப்படும்.

இவ்வகை குறைபாட்டுக்கு நிரந்தர தீர்வு கிடையாதென்றாலும், பயனுள்ள சிகிச்சை மூலம், குழந்தைகள் பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்க கற்றுக்கொள்ள முடியும். சிகிச்சை மூலம் கற்ற திறன்களை தொடர்ந்து பயிற்சி செய்தால், தங்களுக்கு சவாலாக இருக்கும் சமூகச்சூழலை இவர்களால் சமாளிக்க முடியும்.

8 வயது ஆகும்போது, முழுவதுமாக வார்த்தையில் உள்ள கடினமான ஒலிகளை சரியாக உச்சரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமூக பேச்சுத் திறன் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவருக்கு கல்வி, வேலை, சமூகத்தில் பழகுதல், நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றில் பிரச்சனை ஏற்படக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes